» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாடு காவல்துறையில் ஜூன் 28,29ல் நடைபெற இருந்த எஸ்ஐ தேர்வு ஒத்திவைப்பு!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:46:42 AM (IST)
தமிழ்நாடு காவல்துறையில் 1,299 உதவி ஆய்வாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 28,29ல் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 4ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.
காலிப் பணியிடங்களில் ஏற்கனவே பணியில் உள்ளோருக்கு 20%, பொதுத்தேர்வர்களுக்கு 80% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணியில் உள்ள காவலர்களுக்கு எழுத்துத்தேர்வு மட்டும் நடத்தப்படும் எனவும் உடல் தகுதி தேர்வு இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் வருபவர்களுக்கு எழுத்துக்தேர்வுடன் உடல் தகுதித்தேர்வும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதிப்பெண் அடிப்படையில் சீனியாரிட்டி இடம்பெற வேண்டுமென உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து 20% ஒதுக்கீட்டில் தேர்வாகும் காவலர்களுக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் ஜூன் 28,29ம் நடைபெற இருந்த எஸ்.ஐ. தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்
செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:01:59 AM (IST)

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு : மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
செவ்வாய் 24, ஜூன் 2025 10:22:26 AM (IST)

போதைப்பொருளை வழக்கில் கைது : ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
செவ்வாய் 24, ஜூன் 2025 10:16:30 AM (IST)

காவலர்களிடையே பாரபட்சம் காட்டும் உத்தரவை திரும்பப்பெற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்!
திங்கள் 23, ஜூன் 2025 5:43:04 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா 30ம் தேதி தொடக்கம் : ஆட்சியர் ஆலோசனை!
திங்கள் 23, ஜூன் 2025 4:46:24 PM (IST)
