» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பாரத சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர்: திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்திய ஆளுநர்!
செவ்வாய் 10, ஜூன் 2025 11:14:01 AM (IST)

பாரத சனாதன மரபின் சிறந்த துறவி தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்று அவர் பிறந்த வைகாசி அனுஷத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பாரத சனாதன மரபின் மாபெரும் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு, பண்டைய தமிழ் நாள்காட்டியின்படி, வைகாசி அனுஷத்தில், அவரது பிறந்தநாளில், தேசம் தனது மரியாதையை செலுத்துகிறது.
கம்பீரமான திருக்குறளில் பொதிந்துள்ள பக்தி, கர்மம் மற்றும் ஞான யோகங்களின் ஆரோக்கியமான கலவையுடன் ஒருங்கிணைந்த தர்ம வாழ்க்கை குறித்த அவரது போதனைகள், தனிநபர் மற்றும் கூட்டு வாழ்க்கையில் மனிதகுலத்தை வடிவமைத்துத் தொடர்ந்து வழிநடத்துகின்றன. இது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் ஆட்சியாளர்கள் உள்பட அனைவருக்கும் ஒரு விரிவான மற்றும் நீடித்த கட்டமைப்பை வகுக்கிறது.
அவரது குறள்கள் ஞானத்தின் தூணாக விளங்கி, வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய நமது கூட்டு தேசிய பயணத்தை ஊக்குவிக்கவும் வழிநடத்தவும் நித்திய மதிப்புகளைப் பயன்படுத்துகின்றன என ஆளுநர் ரவி தெரிவித்ததாக செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆளுநர் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் புகைப்படங்களையும் ஆளுநர் மாளிகை எக்ஸ் தளம் பகிர்ந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 24, ஜூன் 2025 3:44:18 PM (IST)

பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! போலிப் பாசம் தமிழுக்கு; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:24:37 PM (IST)

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்
செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:01:59 AM (IST)

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு : மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
செவ்வாய் 24, ஜூன் 2025 10:22:26 AM (IST)

போதைப்பொருளை வழக்கில் கைது : ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
செவ்வாய் 24, ஜூன் 2025 10:16:30 AM (IST)
