» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூல்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 10, ஜூன் 2025 11:05:21 AM (IST)
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தியேட்டர்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இன்றைய காலத்தில் தியேட்டர்களில் படம் பார்க்கும்போது வாங்கி சாப்பிடும் பாப்கார்ன் கூட வீட்டிற்கே டெலிவிரி செய்யும் நிலை உள்ளது என்றும், ஓ.டி.டி.யால் தியேட்டர்கள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை தியேட்டர்கள் உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 24, ஜூன் 2025 3:44:18 PM (IST)

பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! போலிப் பாசம் தமிழுக்கு; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:24:37 PM (IST)

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்
செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:01:59 AM (IST)

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு : மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
செவ்வாய் 24, ஜூன் 2025 10:22:26 AM (IST)

போதைப்பொருளை வழக்கில் கைது : ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
செவ்வாய் 24, ஜூன் 2025 10:16:30 AM (IST)
