» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
விவசாய கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமா? - தமிழக அரசு விளக்கம்
செவ்வாய் 10, ஜூன் 2025 10:43:22 AM (IST)
கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் வங்கிகளில் 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் பயிர் கடன் வழங்க வேண்டும் என சுற்றறிக்கையை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சமீபத்தில் அனுப்பி இருந்தார். இந்த நடவடிக்கை விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளுக்கு 'சிபில் ஸ்கோர்' அடிப்படையில் கடன் என்ற அறிவிப்பு கடுமையான நெருக்கடியை உருவாக்கும். இந்த திட்டத்தை உடனடியாக திரும்ப பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அறிவுறுத்தப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. கடன் தொகை நிலுவை இல்லை என்பதை உறுதி செய்ய மட்டுமே சிபில் ஸ்கோர் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்திய அரசின் டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 24, ஜூன் 2025 3:44:18 PM (IST)

பணமெல்லாம் சமஸ்கிருதத்துக்கு! போலிப் பாசம் தமிழுக்கு; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 3:24:37 PM (IST)

முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பெரியார், அண்ணாவை இழிவு படுத்துவதா? வைகோ கண்டனம்
செவ்வாய் 24, ஜூன் 2025 12:20:00 PM (IST)

பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு நாளை முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!
செவ்வாய் 24, ஜூன் 2025 11:01:59 AM (IST)

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு : மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை
செவ்வாய் 24, ஜூன் 2025 10:22:26 AM (IST)

போதைப்பொருளை வழக்கில் கைது : ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
செவ்வாய் 24, ஜூன் 2025 10:16:30 AM (IST)
