» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா கருத்து
செவ்வாய் 10, ஜூன் 2025 10:19:35 AM (IST)
2026 சட்டசபை தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விஜயகாந்த் மீதான இரங்கல் தீர்மானத்துக்கு நாங்கள் வரவேற்பு அளித்தது அரசியல் நாகரிகம். 2 நாட்களில் கூட்டம் நடத்தப்பட்டு 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேமுதிக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்குவது என்பது ஏற்கெனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில் எழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுப்பதை விட, தனது வாக்குறுதி தான் முக்கியம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி எங்களிடம் தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்வியை நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும். அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான். அப்போதுதான் தவறு நடந்தால், ஒரு எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்ட முடியும்.
கரூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை, 24 மணிநேரம் மது விற்பனை, கள்ள லாட்டரி விற்பனை, கனிமவளக் கொள்ளை அதிகமாக நடக்கிறது. இதை முதல்வர் சரி செய்ய வேண்டும். தனியாக வசிக்கும் முதியோர்களுக்கு பாதுகாப்பு இல்லை. கொள்ளை சம்பவம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து: பயணிகள் பாதிப்பு!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:14:58 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் - பொதுமக்கள் கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 8:59:06 PM (IST)

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)


.gif)