» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன் : ஜெயக்குமார் பேட்டி

திங்கள் 14, ஏப்ரல் 2025 12:11:55 PM (IST)

உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன். கட்சியிலிருந்து விலகுவதாக சொல்லவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பதவியை விட்டு விலகுவதாக திருமாவளவன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய்யான செய்தி. எந்த நேரத்திலும் நான் அப்படி சொல்லவில்லை.

நான் பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் நின்றது கிடையாது. என்னை அடையாளம் காட்டியது அதிமுகவும், ஜெயலலிதாவும்தான். அதிமுகதான் உயிர் மூச்சு. உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் மட்டும் பயணிப்பேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory