» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவண்ணாமலை அருகே அரசு பஸ்- கார் நேருக்கு நேர் மோதல்: லாரி உரிமையாளர்கள் 4 பேர் பலி!

திங்கள் 14, ஏப்ரல் 2025 8:29:55 AM (IST)



கீழ்பென்னாத்தூர் அருகே அரசு பஸ் - கார் நேருக்கு நேர் மோதி புதுச்சேரியை சேர்ந்த லாரி உரிமையாளர்கள் 4 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலை வழியாக நேற்று அதிகாலை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரில் புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் (வயது 44), லாரி உரிமையாளர்களான சைலேஷ்குமார் (38), சரோப் ஞானசேகரன் (50), சதீஷ்குமார் (52) ஆகிய 4 பேர் இருந்தனர்.

இவர்கள் தொழில் சம்பந்தமாக பெங்களூருவுக்கு சென்று விட்டு புதுச்சேரிக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஸ்டாலின் ஓட்டினார். அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் இவர்களது கார் புதுச்சேரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.காட்டுகுளம் அருகே இவர்களது கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பஸ்சும், இவர்களது காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் காரில் பயணம் செய்த புதுச்சேரி மாநில லாரி உரிமையாளர் சங்க செயலாளர் ஸ்டாலின் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அதிகாலை நேரம் என்பதால் காரை ஓட்டியவர் லேசாக கண்ணயந்திருக்கலாம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.தொடர்ந்து 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தால் திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பவுர்ணமி தினம் என்பதால் திருவண்ணாமலை கிரிவலம் முடிந்துவிட்டு திருவண்ணாமலையில் இருந்து வந்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Thoothukudi Business Directory