» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொருநை நெல்லை புத்தகத் திருவிழா: சிற்பக் கலைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு!
சனி 30, நவம்பர் 2024 11:38:56 AM (IST)
பொருநை நெல்லை புத்தகத் திருவிழாவின்போது ஓவிய சிற்பக் கலைக் கண்காட்சிக்கு ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

கலை பண்பாட்டுத்துறை சார்பாக, ஓவிய-சிற்பக் கலைக் கண்காட்சி திருநெல்வேலி வர்த்தக மையத்தில் பொருநை நெல்லை புத்தக திருவிழா-2025 நடைபெறும் போது நடத்தப்பட உள்ளது. இக்கண்காட்சியில் திருநெல்வேலி மண்டலத்தின் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர் மற்றும் தென்காசி) மாவட்டங்களில் உள்ள ஓவிய சிற்பக்கலைஞர்கள் தங்கள் கலைப்படைப்புகளை கண்காட்சியாக வைத்து தெரிவு செய்வதற்கு ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு தெரிவு செய்யப்படும். ஓவிய சிற்பக் கண்காட்சியில் முதல் பரிசாக ரூ.5000/- வீதம் 7 கலைஞர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.3000/- வீதம் 7 கலைஞர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.2000/- வீதம் 7 கலைஞர்களுக்கும் காசோலையாக வழங்கப்படவுள்ளது.
எனவே, திருநெல்வேலி மண்டலத்தின் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி விருதுநகர் மற்றும் தென்காசி) மாவட்டங்களில் உள்ள ஆர்வமுள்ள ஓவிய மற்றும் சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியப் படைப்புகளை கண்காட்சியாக வைத்திட தன்விவரக் குறிப்பு மற்றும் படைப்புகள் எண்ணிக்கை படைப்புகளின் புகைப்படங்கள் விவரங்களுடன் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் ஆ குடியிருப்பு திருநெல்வேலி-7 என்ற முகவரிக்கு 15-12-2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், கூடுதல் விவரங்களுக்கு மண்டலக் கலை பண்பாட்டு மையம் தொலைபேசி எண்.0462-2901890 மற்றும் 9487059638, 8122610700 மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் வள்ளி குகையில் 6 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:35:30 PM (IST)

ஒட்டு கேட்கும் கருவி வைத்தது யார் என்பது 2 நாளில் அம்பலமாகும்: ராமதாஸ் பேட்டி!
வெள்ளி 18, ஜூலை 2025 5:20:08 PM (IST)

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என வழக்கு; அதிகாரிகள் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
வெள்ளி 18, ஜூலை 2025 5:11:40 PM (IST)

சிறுமியை பாலியல் பலாத்கரம் செய்தவனை சுட்டுக் கொல்ல வேண்டும்: தாய் ஆவேசம்
வெள்ளி 18, ஜூலை 2025 4:40:58 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது!
வெள்ளி 18, ஜூலை 2025 4:26:47 PM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா முன்னேற்பாடு பணிகள்: அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை!
வெள்ளி 18, ஜூலை 2025 3:09:42 PM (IST)
