» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

படகு பழுதாகி நடுக்கடலில் 6 மீனவர்கள் தவிப்பு : மீட்பு பணி தீவிரம்!

சனி 30, நவம்பர் 2024 10:13:37 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது படகு இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் தத்தளிக்கு மீனவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய 6 மீனவர்கள் கடந்த 21 ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.

கடந்த 26ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய இவர்கள் கரை திரும்பவில்லை. இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை, கடலோர பாதுகாப்புப் படை ஆகியோருக்கு புகார் அளித்தனர். 

இந்நிலையில், சுமார் 45 கடல் மைல் தொலைவில் படகில் இன்ஜின் பழுதாகி நிற்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே மீனவர்களை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வருவதற்காக 3 படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory