» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் : எஸ்.பி.வேலுமணி பேச்சு!
சனி 23, நவம்பர் 2024 3:39:15 PM (IST)
2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ பேசினார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசுகையில், "எடப்பாடியார் நான்கரை ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார்கள். மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது வேறு ஆனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்பார்கள் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
தற்போது எடப்பாடியார் பூத் வாரியாக 9 பேர் கொண்ட நிர்வாகத்தை நியமிக்க உத்தரவிட்டுள்ளார். இது மிகவும் அருமையான திட்டம், அதிமுக எத்தனையோ சோதனைகளை சந்தித்துள்ளது ஒருமுறை அதிமுக ஆட்சியை இழந்தால் அடுத்த முறை மிக பெரிய வெற்றி பெறும், ஆனால் திமுக ஒரு முறை ஆட்சியில் இருந்தால் அடுத்த முறை மிகபெரிய தோல்வியை தான் சந்திக்கும் வருகின்ற 2026ல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ஆட்சி, புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமையும் நீங்கள் எதிர்பாக்கும் நல்ல கூட்டணியும் அமையும் வருகின்ற ஆட்சி அதிமுக ஆட்சி தான் என்றார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து காெண்டனர்..