» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வகுப்பறையில் மாணவனை கால் அழுத்த சொன்ன ஆசிரியர் பணியிடை நீக்கம்

சனி 23, நவம்பர் 2024 10:31:15 AM (IST)



வகுப்பறையில் மாணவனை கால் அழுத்த கூறிய ஆசிரியர் ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

சேலம் கிழக்கு ராஜபாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களை தனக்கு கால் அழுத்திவிட சொல்லிவிட்டு ஓய்வெடுக்கும் கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷின் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இவர் குடிபோதையில் பள்ளியில் தூங்குவதாகவும் கூறப்படும் நிலையில் வைரலாகும் வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், மாணவர்களை கால் அழுத்த கூறிய ஆசிரியர் ஜெயப்பிரகாஷை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார். மாணவன் ஆசிரியருக்கு கால் அழுத்தும் வீடியோ வைரலான நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory