» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய இடைத் தாமிரபரணி வெளியிடு

வெள்ளி 22, நவம்பர் 2024 7:54:13 PM (IST)



முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய தாமிரபரணியை பற்றிய 1100 பக்கம் கொண்ட இடைத்தாமிரபரணி நூல் வெளியிடப்பட்டது.

நெல்லை ம.சு பல்கலைகழகத்தில் சுந்தரனார் அரங்கில் நடைபெற்ற குலசாமி கருத்தரங்களில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய இடைத் தாமிரபரணி நூல் வெளியிடப்பட்டது.  பல்கலைக்கழக தேர்வானையர் உல. பாலசுப்பிரமணியன் இந்த நூலை வெளியிட்டார். மேலப்பாளையம் முஸ்லிம் கல்வி நிலயங்களின் தாளாளர் எல்.கே.எஸ். முகமது மீரான் இந்த நூலை பெற்றுக்கொண்டார்.

இந்த நூலில் பிராஞ்சேரி, கோபாலசமுத்திரம், பழவூர், கீழக்கல்லூர், சுத்தமல்லி, கொண்டாநகரம், கருங்காடு, தருவை, முன்னீர்பள்ளம், திருவேங்கடநாதபுரம் வரலாற்றை எழுத்தாளர் எழுதியுள்ளார். தாமிரபரணி தொடர்பான ஆதிச்சநல்லூர் உள்பட தொல்லியல் தளங்களில் நடந்த நிகழ்வுகள், தாமிரபரணியை காப்பாற்ற நடத்தப்படும் சட்ட போராட்டங்கள், திருநெல்வேலியில் அமையவுள்ள ரிங் ரோடு உள்பட நிகழ்கால தாமிரபரணி சம்பவங்களையும் இந்த நூலில் தொகுத்துள்ளார்.

இதே மேடையில் நடைபெறும் கருத்தரங்களில் குலசாமிகள் கட்டுரை தொகுப்பு நூல் எழுத்தாளர்கள் சுந்தரபாண்டியயின் காவிரி, டாக்டர் சுதாகரின் சாதனை விஞ்ஞானி, டாக்டர் கமலாவின் தொல்காப்பியம் நூல்களை பேராசிரியர் ஹரிகரன், சிற்பி பாமா, தமிழாசிரியர் மகாலெட்சுமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு பொருநையின் செல்வன் விருதையும், பேராசிரியர் கமலாவுக்கு தொல்காப்பிய செல்வி விரும் தலா 10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. 

இந்த விருதை காவ்யா இயக்குனர் முத்துலெட்சுமி வழங்கினார். மாலை நிகழ்வில் பேராசிரியர் பிரபாகரன் தலைமையில் கட்டுரை வாசிக்கப்பட்டது. தொல்லியல் துறை உதவி பேராசிரியர்கள் முருகன், மதிவாணன்,சத்தியா, தெற்குகள்ளிகுளம் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் ( சுயநிதி) கிரிஷா, ஓய்வு பெற்ற நூலகர் முத்துகிருஷ்ணன். தமிழ் பற்றாளர் செல்வ முத்து மாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory