» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

வெள்ளி 22, நவம்பர் 2024 5:13:08 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய நவ.23 மற்றும் 24ஆம் தேதி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் -2025 பணியானது 29.10.2024 முதல் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வாக்காளர்களிடமிருந்து மனுக்கள் பெற்று வருகின்றனர். 

மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 16.11.2024 மற்றும் 17.11.2024 ஆகிய நாட்களில் இரு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட படிவம்-6 -8563 (18-19 இளம் வாக்காளர் மனுக்கள் 4706 ), பெயர் நீக்கம் செய்திட படிவம் -7- 393 மனுக்கள் பெயர், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 மனுக்கள்-3962, ஆதார் எண் இணைத்திட படிவம் 6பி மனுக்கள் - 3 ம் ஆக மொத்தம் 12921 மனுக்கள் வரப்பெற்றுள்ளது. 

இந்நிலையில், மீதமுள்ள இரண்டு சிறப்பு முகாம்கள் 23.11.2024 சனிக்கிழமை, 24.11.2024 ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெற உள்ளது.  எனவே, பொது மக்கள் காலை 10 மணி முதல் 5.30 மணி வரை, வாக்குச்சாவடி அமைவிடங்களில், மேற்கண்ட தினங்களில், மேற்கண்ட படிவங்கள் அளித்து பலன் பெறலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. வாக்குச்சாவடி அமைவிட அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், படிவங்கள் பெறுவதற்கு பூர்த்தி செய்யவும் உதவி செய்வர் என்ற விபரமும் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் https://voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline App என்கிற மொபைல் செயலி மூலமாகவும் உரிய ஆவணங்களுடன் பொது மக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திடலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணி குறித்து பொதுமக்கள் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களையோ அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண். 1950 னை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகம், கோரிக்கை தொடர்பான விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட, நீக்கம் செய்திட, பிழைதிருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திட மற்றும் ஆதார் எண் இணைத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்த்திடவும், ஆதார் எண்ணினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்திடவும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன், தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory