» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது: செல்வப்பெருந்தகை

வெள்ளி 22, நவம்பர் 2024 12:33:29 PM (IST)

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி விவகாரத்தில் ஆதாரங்கள் இருந்ததால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை விவகாரத்தில் தடயங்கள் கிடைக்காததால், குற்றவாளிகளை பிடிப்பது காவல்துறைக்கு சவாலாக இருப்பதாகவும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; "நடிகை கஸ்தூரியின் பேச்சு தொடர்பான ஆதாரங்கள் தெளிவாக இருந்தன. அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி கே.பி.ஜெயக்குமாரின் கொலை வழக்கில், குற்றவாளிகள் யார் என்ற மர்மம் தொடர்ந்து நீடிக்கிறது.

அதற்கு போதிய சி.சி.டி.வி. ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்த கொலையை திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். நமது திறமையான காவல்துறையினர் குற்றவாளிகளை நிச்சயம் பிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அவர்கள் விசாரணையை தொடரட்டும். புலன் விசாரணையில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது." என்றார்


மக்கள் கருத்து

ஆனந்த்Nov 22, 2024 - 01:56:51 PM | Posted IP 162.1*****

குடிகாரன் உளறினால் தான் தெரியும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory