» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் தொடக்கம்: நகர் மன்ற தலைவர் ஆய்வு

திங்கள் 18, நவம்பர் 2024 2:58:22 PM (IST)



கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் குறித்து நகர் மன்ற தலைவர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆய்வு மேற்கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பஸ் நிலையத்தில் 49 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு  பணிகள் நேற்று முதல் தொடங்கியுள்ளது.‌ சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.

அதன்படி அண்ணா பேருந்து நிலையம் முனியசாமி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மினி பேருந்துகள் வந்து நிறுத்தி செல்ல வசதி செய்வது, மினி பேருந்துகள் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஆர்த்தி மருத்துவமனை நகர பேருந்து நிலையம் வழியாக நுழைவாயில் அருகில் உள்ள சாலை வழியாக நிறுத்தம் செய்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும்.தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் பூங்கா அருகே திருநெல்வேலி பிரதான நெடுஞ்சாலையில் நிறுத்தி செல்ல வேண்டும் குருவிகுளம், கயத்தாறிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகளை நகர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என்று அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.

இதனை செயல்படுத்துவது தொடர்பாக கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.  மக்களுக்கு  சிரமம் ஏற்படாமல், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஆலோசனை நடத்தினர்.


மக்கள் கருத்து

அப்துல் மஜீத் ர, முகம்மதுசாலிகாபுரம்Nov 22, 2024 - 06:54:30 PM | Posted IP 162.1*****

மக்களின் நலன் கருதி அரசு மற்றும் நகராட்சி நிர்வாகம் எடுக்கும் நல்ல திட்டங்களை பொதுமக்கள், பயணிகள் சிறமத்திற்குள்ளாகாமல் விரைந்து பணிகளை மேற்கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

BharaniNov 20, 2024 - 09:42:58 PM | Posted IP 162.1*****

முதலில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றி பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க வேண்டும்.

PonsukumarNov 20, 2024 - 06:19:09 PM | Posted IP 172.7*****

New busstand ku Chang painalam

Rajaram KrishnasamyNov 19, 2024 - 09:46:13 PM | Posted IP 172.7*****

There is no information about which are all the routes operating from New Bus Stand

முத்துக்குமார்Nov 19, 2024 - 09:37:29 PM | Posted IP 172.7*****

நாற்பத்து ஒன்பது லட்சம் ரூபாய் சுவாங் செய்ய ஓய்வு பெறும் பொறியாளர் மற்றும் நகராட்சி தலைவர் போடும் கபட நாடகம். ஏற்கனவே மாதம் 35 லட்சம் வருமானம் தந்த நகராட்சி காய்கறி சந்தைக்கு நேர்ந்த கதி போல் ஆகையால் இருந்தால் சரி. நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியவில்லை. இது தான் தமிழகம் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory