» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோசடி வழக்கு விசாரணை: அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்!

செவ்வாய் 1, அக்டோபர் 2024 5:08:08 PM (IST)

போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்குகளின் விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2011-15 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 47 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 மோசடி வழக்குகளை கடந்த 2015, 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 2 ஆயிரத்து 202 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பாக இன்று (அக்.1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

அப்போது நீதிபதி ஜி. ஜெயவேல், கூடுதல் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நூறு பேர் வீதம் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்படும். அனைவருக்கும் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்ட பிறகு இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என தெரிவித்து விசாரணையை அக்.24-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory