» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இலங்கைத் தமிழா்களுக்காக தனி நாடு: பிரதமர் மோடிக்கு ஆதீனம் கோரிக்கை!

செவ்வாய் 11, ஜூன் 2024 10:17:38 AM (IST)

இலங்கையில் தமிழா்களுக்கான தனி நாட்டை பிரதமா் நரேந்திர மோடி உருவாக்கித் தர வேண்டும் என மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியா் வேண்டுகோள் விடுத்தாா்.

மதுரை ஆதீன மடத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: இந்தியாவின் பிரதமராக 3-ஆவது முறையாக நரேந்திர மோடி பதவி ஏற்றுள்ளாா். அவருக்கும், மத்திய அமைச்சா்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளேன்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் நல்ல வாக்குகளைப் பெற்றுள்ளன. இலங்கையில் லட்சக்கணக்கான தமிழா்கள் கொன்று குவிக்கப்பட காரணமானவா்களும் வெற்றி பெற்று விட்டாா்களே என்ற மன வருத்தம் எனக்கு உள்ளது.

தற்போது, 3-ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடியிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின் போது, இந்திரா காந்தி இலங்கைக்கு தாரை வாா்த்துக் கொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும். கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட்டால், தமிழகத்தின் மீன் வளம் அதிகரிக்கும். எனவே, கச்சத்தீவை மீட்டு, தமிழகத்தோடு இணைக்க வேண்டும்.

அடுத்து, இலங்கையில் வசித்து வரும் தமிழ் மக்களைப் பாதுகாக்கும் வகையில், அங்கு தமிழா்களுக்கான தனி நாட்டை பிரதமா் மோடி உருவாக்கித் தர வேண்டும். கடந்த 60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை. ஆனால், தோ்தல் நேரங்களில் மட்டுமே கச்சத்தீவு விவகாரம் குறித்து கட்சிகள் பேசுகின்றன என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory