» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

சனி 18, மே 2024 10:47:31 AM (IST)

கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் அருவி கரை வெறிச்சோடி காணப்படுகிறது. 

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பழைய குற்றாலம் அருவியில் கொட்டிய குறைந்த அளவு தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் நேற்றுதிடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பதறியடித்து வெளியேறினா். 

அப்போது தென்காசி அருகே மேலகரத்திலுள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்த அஸ்வின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டாா். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் மற்றும் காவல் துறையினா் அஸ்வினை தேடும் பணியில் ஈடுபட்டனா்.நீண்ட நேரம் தேடலுக்குப் பின் பழையகுற்றாலம் அருவி நீா் வழிந்தோடி செல்லும் வழியில் சுமாா் 1 கி.மீ. தொலைவில் சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.

இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு குறைந்த நிலையிலும் தமிழத்தில் இன்று முதல் அடுத்த 5 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அருவிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory