» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சேதுக்குவாய்த்தான் வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு

சனி 18, மே 2024 10:34:21 AM (IST)



சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் சேதுக்குவாய்த்தான் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.70 இலட்சம் மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்டுவரும் நியாய விலைக் கடை கட்டுமானப் பணிகளை, ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில்  புதிதாக கட்டப்பட்டு வரும் தகன மேடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி இன்று (18.05.2024) ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கட்டுமானப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா,  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (ஆழ்வார்திருநகரி) பாக்கியம் லீலா, சித்தார்த்தன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory