» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கூடங்குளத்தில் முதல் அணு உலையில் 79 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி!

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 4:11:43 PM (IST)

கூடங்குளம் அணு மின் நிலையத்தின்  முதல் யூனிட்டில் 79 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி முதல் அணு உலையில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டு இருந்தது. வருடாந்திர பராமரிப்பு பணிகள் முடிந்து 79 நாட்களுக்கு பிறகு இன்று காலை மின்சார உற்பத்தி மீண்டும் தொடங்கியது. 

சுமார் 300 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கிய நிலையில் படிப்படியாக அதிகரித்து நாளைக்குள் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிவிடும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory