» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: சபாநாயகர் அப்பாவு விளக்கம்

புதன் 3, ஏப்ரல் 2024 4:05:19 PM (IST)

"திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட எனது மகனுக்கு சீட் வழங்காததால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது" என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாலோ, எனது மகனுக்கு சீட் வழங்கவில்லை என்பதாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் முடிவுகளை எடுக்கலாம். 

திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவிற்கு விவரம் இல்லாதவன் நான் இல்லை . இவ்வாறு அப்பாவு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory