» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)
நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கள்ளக்காதலனுடன் தாய் கைது செய்யப்பட்டார்.
நெல்லை பாளையங்கோட்டை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (24), டிரைவர். இவருக்கும் பாளையங்கோட்டையில் ஒரு பகுதியை சேர்ந்த திருமணமான 42 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பெண்ணுக்கு 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதில் மகள் உள்ளார்.
மணிகண்டனுக்கும், அந்த பெண்ணுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் வீட்டுக்கு அடிக்கடி சென்ற மணிகண்டன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உல்லாசம் அனுபவித்து வந்தார்.
இதுதவிர மாணவியின் கண்முன்னே அவர்கள் 2 பேரும் தனிமையில் இருந்துள்ளனர். மணிகண்டன் அடிக்கடி அந்த பெண்ணின் 14 வயது மகளை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்தார். தாய் கண் முன்னே மாணவிக்கு மணிகண்டன் பாலியல் தொல்ைல ெகாடுத்ததாக கூறப்படுகிறது. அதை மாணவியின் தாய் தட்டிக்கேட்கவில்லை.
இதுகுறித்து மாணவி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியை மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவி, தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் தாயின் கள்ளக்காதல் விவகாரம் ஆகியவை குறித்து போலீசாரிடம் கூறினார். இதுதொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து மாணவியின் தாய், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)


