» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அருகே ஓடும் இரயிலில் துணிகர வழிப்பறி: 4 கொள்ளையர்கள் அதிரடி கைது
வெள்ளி 22, மே 2026 11:03:58 AM (IST)

தூத்துக்குடி அருகே ஓடும் இரயிலில் புகுந்து, பயணிகளை அச்சுறுத்தித் தங்கம், ரொக்கப் பணம் செல்போன் பறித்துச் சென்ற வழக்கில், 4பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி ரயிலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூர், புன்னைவனம் பகுதியைச் சேர்ந்த ராமைய்யா மகன் பிச்சையா (55) என்பவரிடம் 4 பேர் கொண்ட மர்மக் கும்பல், கைப்பேசி மற்றும் சட்டைப் பையிலிருந்த ரூ.100 ரொக்கப் பணத்தைக் கத்திமுனையில் பறித்துக் கொண்டு தப்பியோடியது..
இது போல் தூத்துக்குடி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் சூசை மாணிக்கம் மகன் மரிய அமல்தாஸ் (55). இவர் அன்று இரவு கோவையிலிருந்து புறப்பட்ட 'கோவை – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்துள்ளார். மறுநாள் அதிகாலை 03:30 மணியளவில் மணியாச்சி ரயில் நிலையத்தில் இறங்கிய மரிய அமல்தாஸ், அங்கிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் பயணிகள் ரயிலில் ஏறிப் புறப்பட்டுள்ளார்.
அப்போது அதே கும்பல் ரயிலில் ஏறி அவரைமிரட்டி அவர் கையில் அணிந்திருந்த அரை பவுன் தங்க மோதிரம் மற்றும் ரூ.300 ரொக்கப் பணத்தை பறித்துக் கொண்டு, ரயிலில் இருந்து குதித்துத் தப்பியோடிவிட்டது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக தூத்துக்குடி தாளமுத்து நகர் புதிய முனியசாமி புரம் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் கணேசன் (22), தாளமுத்து நகர் சுடலையாபுரம் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் வசந்தகுமார் (24), ராமலிங்கம் மகன் ராஜலிங்கம் (23) மற்றும் தாளமுத்து நகர் சோட்டையன் தோப்பு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முத்துக்குமார் (23) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)



Babuமே 22, 2026 - 01:21:38 PM | Posted IP 104.2*****