» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்கு நினைவு சின்னம் : தவெக அரசுக்குக் கோரிக்கை!
வியாழன் 21, மே 2026 4:51:06 PM (IST)
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்குத் தூத்துக்குடியின் முக்கியப் பகுதியில் நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 மே 22 அன்று நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் பலியான 15 தியாகிகளின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மண்ணிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை முற்றிலும் அகற்றப் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 'ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு' கோரிக்கை விடுத்துள்ளது.
உச்ச நீதிமன்றமே ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரி என உத்தரவிட்ட பிறகும், தூத்துக்குடி மண்ணில் ஆலை இன்னும் அகற்றப்படாமல் இருப்பது நீதிமன்ற அவமதிப்பாகும். எனவே, தமிழக அரசு நிலத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக அகற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட வேண்டும்.
வேதாந்தா நிறுவனம் பசுமை முறையில் தாமிர உற்பத்தி செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர்ந்துள்ளது. முந்தைய அதிமுக, திமுக அரசுகளின் நிலைப்பாட்டைப் போல, புதிய 'தவெக' அரசும் ஸ்டெர்லைட் ஆலை எந்த ரூபத்தில் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது.
முந்தைய திமுக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் பரிந்துரைகளைச் செயல்படுத்தவில்லை. தற்போதைய அரசு இப்பரிந்துரைகளை அமல்படுத்தி, துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான 17 காவல்துறையினர் மற்றும் 4 வருவாய்த்துறையினர் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகிகளுக்குத் தூத்துக்குடியின் முக்கியப் பகுதியில் தகுந்த நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (மே 22) நடைபெறும் 8-ஆம் ஆண்டு தியாகிகள் நினைவு தினத்தை அனைத்துக் கட்சிகள், இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து அனுசரிக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்களான வழக்கறிஞர்கள் சே. வாஞ்சிநாதன், கெ. அரி ராகவன் ஆகியோர் அறிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
MAKKALமே 21, 2026 - 05:16:03 PM | Posted IP 172.7*****
புதிய 'தவெக' அரசும் ஸ்டெர்லைட் ஆலை எந்த ரூபத்தில் வந்தாலும் அனுமதிக்கக் கூடாது.
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)



சரிமே 21, 2026 - 06:08:24 PM | Posted IP 104.2*****