» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு
வியாழன் 21, மே 2026 8:09:18 AM (IST)
தூத்துக்குடியில் குடும்பத் தகராறு காரணமாக, மளிகைக் கடையில் இருந்த பெண்ணை அரிவாளால் தாக்கிய 2பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அண்ணா நகர், 12-ஆவது தெரு, மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த பூபால் ராஜா என்பவரது மனைவி அமுதா (50). பூபால் ராஜா ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வரும் நிலையில், இம்பதியினர் தங்களது வீட்டின் முன்பாகப் பழைய இரும்பு மற்றும் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் அருண்குமார், தனது மனைவி சரஸ்வதி (29) மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார்.
அருண்குமார் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அருண்குமாருக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே வழக்கம் போல் கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கு வந்த அமுதா தனது மகனான அருண்குமாருக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது.
இதனால் மருமகள் தரப்பிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நேற்று புதன்கிழமை அமுதா வழக்கம் போல் தனது மளிகைக் கடையில் வியாபாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத இருவர், பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அமுதாவைச் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த அமுதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிப்காட் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
முதற்கட்ட விசாரணையின்படி, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் அருண்குமாரின் மனைவி சரஸ்வதியின் சகோதரரான சங்கர் (32) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள சங்கர் உள்ளிட்ட 2 குற்றவாளிகளையும் பிடிப்பதற்காகச் சிப்காட் போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிட வேண்டும் - ஆட்சியர் ஆர்.அழகுமீனா
வியாழன் 21, மே 2026 3:53:43 PM (IST)

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்: ஆட்சியர் பாராட்டு!
வியாழன் 21, மே 2026 11:43:18 AM (IST)

குமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசிப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றம்!
புதன் 20, மே 2026 3:27:05 PM (IST)

மகளிர் ஐடிஐ-யில் மாணவியர் சேர்க்கை தொடக்கம்: ஆண்லைனில் விண்ணப்பிக்கலாம்!
புதன் 20, மே 2026 10:14:49 AM (IST)

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள்: உயிர்காத்த தீயணைப்பு வீரருக்கு பாராட்டு மழை!
புதன் 20, மே 2026 8:37:00 AM (IST)

சொட்டு நீர் பாசனத்திற்கு 100 சதவீதம் மானியம் : விவசாயிகள் பயன்பெற ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 19, மே 2026 3:53:35 PM (IST)



Nithiமே 21, 2026 - 10:33:57 AM | Posted IP 162.1*****