» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை: நெல்லையில் விஜய் பிரச்சாரம்!
புதன் 8, ஏப்ரல் 2026 3:46:25 PM (IST)

மக்கள் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று நெல்லையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசினார்.
மேடையில் தோன்றிய விஜய், தனது கட்சியின் கொள்கைப் பாடலின் வரிகளான, "நான் தன்னந்தனி ஆளு.. என்ன ஏளனமா பாரு.. மிரளப் போகுது ஸ்டேட்டு.. எங்க விசிலு சத்தம் கேட்டு..." என்பதைப் பாடித் தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து தொண்டர்களை நோக்கி, "உங்கள் விஜய் நான் வர்றேன், விசில் அடிக்க ரெடியா?" என்று அவர் கேட்டபோது மைதானமே அதிர்ந்தது.
"நாங்கள் சொல்லாததைச் செய்வோம்; ஆனால், செய்வதை மட்டும்தான் சொல்வோம். தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்தவுடன் பெண்கள், இளைஞர்கள், உழைப்பாளர்கள், மீனவர்கள் என அனைவரும் நல்லா இருப்போம், நல்லாவே இருப்போம்.
மக்களின் பணத்தைத் தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை. இப்போது ஆட்சியில் இருப்பவர்களால் இதைத் துணிச்சலாகச் சொல்ல முடியுமா? இது மாற்றத்திற்கான தேர்தல். உங்கள் (மக்களின்) பணத்தை வைத்து எதையும் மறைக்கவோ, எங்களைத் தடுக்கவோ முடியாது.
இது ஒரு தலைமுறைக்கான தேர்தல்; மாற்றத்திற்கான தேர்தல். பல வலிகளைத் தாங்கிக்கொண்டு உங்களுக்காக வந்துள்ளேன். ஒரு அண்ணா, ஒரு காமராஜர், ஒரு எம்.ஜி.ஆர். போன்ற தலைவர்கள் மீண்டும் வரமாட்டாரா என நீங்கள் ஏங்கியது போதும்; இதோ நாங்கள் வந்துவிட்டோம்."
முத்துராமலிங்கத் தேவர், சுந்தரலிங்கனார், வ.உ.சி., அழகுமுத்துக்கோன், ஒண்டிவீரன், கட்டபொம்மன் போன்ற மாவீரர்களைப் போல மக்களுக்காக நாங்கள் உழைப்போம். வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி, தயவுசெய்து 'விசில்' சின்னத்திற்கு வாக்களியுங்கள். இந்தத் தேர்தல் ஒரு 'விசில் புரட்சி' தேர்தலாக இருக்க வேண்டும்," என உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)

