» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி விவசாயிகளிடம் கட்டாய இன்சூரன்ஸ் வசூல்: ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கம் புகார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:18:11 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில், விவசாய நகைக்கடன் வழங்கும் போது காப்பீட்டு பாலிசிகளை கட்டாயப்படுத்தி திணிப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் அளித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "ஐ.ஓ.பி வங்கியில் நகைக்கடன் பெறச் செல்லும் விவசாயிகளிடம், விபத்து அல்லது இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்தால் மட்டுமே கடன் வழங்கப்படும் என வங்கி அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். விவசாயிகளின் சேமிப்புக் கணக்கிலிருந்து அவர்களின் அனுமதியின்றி ரூ.800 முதல் ரூ.3,000 வரை காப்பீட்டுத் தொகையாகப் பிடித்தம் செய்யப்படுகிறது.
விவசாய நகைக்கடன் பெறுவதற்கு இத்தகைய இன்சூரன்ஸ் பாலிசிகள் கட்டாயம் என்று மத்திய அரசோ அல்லது ரிசர்வ் வங்கியோ எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வங்கி அதிகாரிகள் தங்களது காப்பீட்டு விற்பனை இலக்குகளை எட்டுவதற்காக, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள விவசாயிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருவருகிறது.
இன்சூரன்ஸ் பாலிசிகளைத் திணிக்கும் இந்த விதிமீறல் நடைமுறையை வங்கி கிளைகளில் உடனடியாக நிறுத்த உத்தரவிட வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய செயல்கள் நடைபெறாத வண்ணம் சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். விவசாயிகளின் சேமிப்புக் கணக்குகளை ஆய்வு செய்தாலே இந்த முறையற்ற பணப்பிடித்தம் வெளிச்சத்திற்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிரதமர் மோடி வருகை: கன்னியாகுமரிக்கு தினசரி இரயில்கள் கிடைக்குமா? – பயணிகள் எதிர்பார்ப்பு!
வெள்ளி 20, பிப்ரவரி 2026 8:10:46 PM (IST)

அமிர்த் பாரத் கால அட்டவணையை மாற்றக் கோரிக்கை: நள்ளிரவில் சேருவதால் ரயில் பயணிகள் அவதி
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:02:34 PM (IST)

சீசன் காலத்தில் ஏமாற்றிய கேரை மீன்கள்: சூறைக் காற்றால் பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள்!
வியாழன் 19, பிப்ரவரி 2026 5:10:51 PM (IST)

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் தானம் மூலம் 6 பேருக்கு மறுவாழ்வு
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:41:44 AM (IST)

துபாயில் வேலை என ஆசை காட்டி ரூ.1.5 கோடி மோசடி செய்தவர் 24 மணி நேரத்தில் கைது!
புதன் 18, பிப்ரவரி 2026 4:55:56 PM (IST)

மருத்துவ மேல்படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் மீது வழக்கு!
புதன் 18, பிப்ரவரி 2026 8:41:13 AM (IST)


Siva SriFeb 19, 2026 - 05:40:29 PM | Posted IP 162.1*****