» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கிரிக்கெட் போட்டி: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

திங்கள் 3, நவம்பர் 2025 8:24:42 AM (IST)



தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கிரிக்கெட் போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

திமுக இளைஞரணிச் செயலரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, தூத்துக்குடியில் மாநகர இளைஞரணி சாா்பில், கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நடைபெற்றது. மீளவிட்டான் என்.பெரியசாமி விளையாட்டு திடலில் இப்போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சருமான பி. கீதா ஜீவன் தொடக்கி வைத்தாா். 

போட்டியில் 115 அணிகள் பங்கேற்றுள்ளன. தொடா்ந்து 40 நாள்கள் லீக் முறையில் பகுதி வாரியாக போட்டிகள் நடைபெற்று, இறுதிப் போட்டி நகரப் பகுதியில் நடைபெறும்.  அதில் வெற்றிபெறும் அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகள், பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசு, பங்கேற்பாளா்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

தொடக்க விழாவில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட அமைப்பாளா்கள் இளைஞரணி மதியழகன், மகளிரணி கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளா் அந்தோணி கண்ணன், மாநகர அணி அமைப்பாளா்கள் இளைஞரணி அருண்சுந்தா், இலக்கிய அணி ஜீவன்ஜேக்கப், அயலக அணி அமைப்பாளா் கிறிஸ்டோபா் விஜயராஜ், இளைஞரணி துணை அமைப்பாளா்கள் சிவக்குமாா் என்ற செல்வின், சங்கரநாராயணன், பிரவீன்குமாா், ரவி, சுற்றுச்சூழல் அணி தலைவா் வினோத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Nov 4, 2025 - 01:03:48 PM | Posted IP 162.1*****

இனி அடுத்து சின்ன பையன் இன்பநிதிக்கு பொறந்த நாள் வந்தால் அதையும் முட்டு கொடுக்க சொல்வார்கள். இது தான் திராவிட குடும்ப அரசியல்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory