» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கொசு மருந்து தெளிப்பு பணி: ஆணையர் ஆய்வு

ஞாயிறு 2, நவம்பர் 2025 4:19:45 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு வாகனத்தை ஆணையர் பிரியங்கா  ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் கடந்த சில நாள்களாக கொசு தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், மாநகராட்சி பகுதியில் கொசு மருந்து தெளிப்பு பணியை பழைய நகராட்சி அலுவலகம் முன்பாக  ஆணையர்  பிரியங்கா துவக்கி வைத்தார்.  

மேலும் வஉசி மார்க்கெட் அருகில் கொசு மருந்து தெளிப்பு வாகனத்தை ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் கிழக்கு மண்டல சுகாதார அதிகாரி ராஜசேகர், தெற்கு மண்டல சுகாதார அதிகாரி ஸ்டாலின், ஆணையரின் உதவியாளர் துரைமணி, மற்றும் சுகாதார குழுவினர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

ஏரியா காரன்Nov 2, 2025 - 06:45:40 PM | Posted IP 172.7*****

மாநகராட்சி அமைத்த கொசுக்கள் இனப்பெருக்கம், உற்பத்தியாகும் இடம் தான் கால்வாய், பாதாள சாக்கடை தான். அங்கு தான் அதிகம் தண்ணீர் தேங்கி நிற்கும். வேற என்னத்த சொல்ல?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory