» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் : வாகன உரிமையாளர் அதிர்ச்சி

வெள்ளி 3, அக்டோபர் 2025 12:49:21 PM (IST)



தூத்துக்குடியில் வீட்டில் நிறுத்தியிருந்த காருக்கு டோல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து வாகன உரிமையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி தமிழ்ச்சாலையைச் சேர்ந்த கைலாசம் என்பவர் கூறுகையில், எனக்கு இன்று அதிகாலை 4.13க்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் உங்களது வாகனம் (எண் xxxx) வாகைகுளம் டோல் கேட்டில் கடந்ததற்காக ரூ.80.00 எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலையில் வீட்டில் கார் நிற்க எப்படி நமது காருக்கு டோல்கட்டணம் வசூலித்தனர் எனத் தெரியவில்லை. இதுகுறித்து  டோல் பிளாசாவுக்கு போன் செய்தபோது அவர்கள் போனை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக கைலாசம் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

RajanOct 4, 2025 - 11:54:42 AM | Posted IP 162.1*****

recon debit nu varum munnadi poirupanga appo tollgate debit agirukathu ippo debit agirugum

அன்புOct 3, 2025 - 11:22:07 PM | Posted IP 104.2*****

எனக்கும் இதுபோல ஒரு முறை வந்தது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory