» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக விரைவு ரயில் : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!!
திங்கள் 28, ஜூலை 2025 8:50:49 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு இரவு நேர ரயில் தினசரி இயக்க வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வருகை தந்த மதுரை ரயில்வே கோட்ட முதுநிலை இயக்க மேலாளர் ஆர்.சிவாவை மாவட்ட பயணிகள் நல சங்க தலைவர் அ. கல்யாணசுந்தரம், செயலாளர் மா. பிரமநாயகம், பொருளாளர் வே. லெட்சுமணன், துணைத் தலைவர் எஸ். அந்தோணி முத்துராஜா, நிர்வாகச் செயலாளர் ஜே.ஏ.என். ஆனந்தன், உறுப்பினர் ஆர்.ராஜமோகன் ஆகியோர் நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மனுவில் விடுத்துள்ள கோரிக்கைகள்
1) வண்டி எண். 12693-12694 தூத்துக்குடி- சென்னை, சென்னை-தூத்துக்குடி முத்துநகர் ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி நிரந்தரமாக இணைக்க வேண்டும்.
2) தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும்.
3) வண்டி எண் 16765-16766 தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் இரு முறை இயங்கும் விரைவு ரயிலை உடனடியாக வாரம் மூன்று முறையாக மாற்ற வேண்டும். மேலும், இந்த ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க வேண்டும் .
4) வண்டி எண் 16791-16792 தூத்துக்குடி- பாலக்காடு, பாலக்காடு- தூத்துக்குடி "பாலருவி விரைவு ரயிலில்" மூன்று அடுக்கு ஏசி பெட்டி ஒன்றும், இரண்டடுக்கு ஏசி பெட்டி ஒன்றும் உடனடியாக இணைக்க வேண்டும்.
5) கடந்த 145 ஆண்டுகளாக தூத்துக்குடி சென்னை இடையே முத்து நகர் ஒரே ஒரு ரயில் மட்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ரயிலில் அனைத்து நாட்களும் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது. ஆர்ஏசி டிக்கெட் கூட இந்த ரயிலில் உறுதிப்படுத்தப்படாமல் பயணிகள் சென்று கொண்டிருக்கிறார்கள். இதை தவிக்கும் பொருட்டு தூத்துக்குடி நகரின் நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக ஒரு விரைவு இரவு நேர ரயில் தினசரி இயக்க வேண்டும்.
6) மதுரை -லோக்மான்ய திலக் விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீடிக்க வேண்டும்.
7) திருச்சி- காரைக்குடி, காரைக்குடி- விருதுநகர் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி,தூத்துக்குடி வரை நீடித்து, தூத்துக்குடி-திருச்சி தினசரி ரயிலாக மாற்றி விரைவாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) தூத்துக்குடியில் இருந்து பகல் நேரத்தில் தூத்துக்குடி-சென்னை இடையே ஒரு லிங்க் எக்ஸ்பிரஸ் ஓடிக்கொண்டிருந்தது. அது இப்போது இயக்கப்படவில்லை. ஆதலால், பகல் நேரத்தில் தூத்துக்குடி- சென்னை இடையே பகல் நேர ரயில் இயக்க வேண்டும்.
9) தூத்துக்குடி- திருநெல்வேலி-தென்காசி மாவட்ட பயணிகள் வசதிக்காக, நீண்ட நாள் கோரிக்கையான தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி தென்காசி புனலூர் வழியாக கொல்லத்திற்கு ஒரு விரைவு ரயில் பகல் நேரத்தில் தினசரி இயக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தூத்துக்குடி ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் ஜி. பிரேம் சுந்தர், தூத்துக்குடி முதுநிலை வர்த்தக ஆய்வாளர் ஏ.உத்திர முருகன் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
GANESH r sJul 29, 2025 - 12:01:50 PM | Posted IP 162.1*****
தூத்துக்குடி டு திருச்செந்தூர் நேர்வழியே ரயில் பாதை அமைக்க வேண்டும் ஏற்கனவே ஆறுமுக நீரில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் வசதி உண்டு ஆகையால் தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநேரி வரை ரயில் பாதை அமைக்க பயணியர் நல சங்கம் முயற்சி எடுக்க வேண்டும்
ஓட்டு போட்ட முட்டாள்Jul 29, 2025 - 11:16:26 AM | Posted IP 104.2*****
mla mp க்கள் இருந்ததும் எந்த பயனும் இல்லை
SivaSriJul 28, 2025 - 09:32:56 PM | Posted IP 172.7*****
வணக்கம் பயணிகள் நலன் கருதி செயல்பட கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.இதுவரை எந்த வித செயல்பாடு இல்லை.மேலும் விமான செயல்பாடு கூட விரைவில் மோடி ஐயா மக்கள் நலன் கருதி துரிதமாக வளர்ச்சி பெற முன் விழைந்தாரகள்.தொழில் மிகுந்த நகரம்.கடல் மார்க்கம் உள்ள நகரம்.மேலும் பகல் காலை 7.50க்கு லிங் குருவாயூர் தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி இணைப்பு அதை கொரோனா காலத்தில் இருந்து நிறுத்தப்பட்டது.இன்னும் இயக்கவில்லை.விரைவில் வரும் என்ற நம்பிக்கை.
PremJul 28, 2025 - 09:00:08 PM | Posted IP 104.2*****
145 years,only one night train, great 😃 Still asking 😔,SR RAILWAY DOING WELL! Hope next year also same demand v Do! Nothing happened 😕
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

ரயில் இன்ஜினை சிறைபிடித்து இளைஞர் காங்கிரசார் போராட்டம்: இரணியலில் பரபரப்பு!
வெள்ளி 6, மார்ச் 2026 4:49:05 PM (IST)

குமரி பயணிகளின் மிகுந்த வரவேற்பை பெற்று அதிக வருவாய் பெறும் அந்தியோதயா ரயில்
வெள்ளி 6, மார்ச் 2026 12:27:09 PM (IST)

நாகர்கோவிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அந்தியோதயா ரயில் கட்டண விபரம்
வெள்ளி 6, மார்ச் 2026 10:14:29 AM (IST)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா
வெள்ளி 6, மார்ச் 2026 8:01:34 AM (IST)

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; இருவர் படுகாயம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:30:14 PM (IST)


BalamuruganJul 29, 2025 - 09:15:38 PM | Posted IP 162.1*****