» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி பன்னாட்டு விமான நிலையம் அமைந்த வரலாறு: மூத்த வக்கீல் சொக்கலிங்கம் பேட்டி..!
வெள்ளி 25, ஜூலை 2025 9:05:42 PM (IST)

தூத்துக்குடி பன்னாட்டு விமான நிலையம் அமைந்த வரலாறு குறித்து மூத்த வக்கீல் சொக்கலிங்கம் கூறுகையில், "பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலம் அது. அன்றைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான புருஷோத்தம் கவுஷிக் தூத்துக்குடி வந்திருந்த போது, இந்திய வியாபார தொழில் வர்த்தக சங்க கூட்ட அரங்கில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது, வியாபார சங்க தலைவரான வி.வி.டி.நித்தியானந்தம் விமான நிலையம் வாகைகுளத்தில் அமைக்க வேண்டும் என்று கூறினார். பின்னர் பேசிய நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஆலடி அருணா விமான நிலையம் அபிஷேகப்பட்டியில் அமைக்க வேண்டும் என்றும், கே.டி.கோசல்ராம் கயத்தாறில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பேசினார்கள். அடுத்து பேசிய அப்போதைய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட ஜனதா கட்சி தலைவரான வக்கீல் எம்.சொக்கலிங்கம் வாகைகுளத்தில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அப்போதைய தூத்துக்குடி துறைமுக சபை தலைவரான, முன்னாள் நெல்லை மாவட்ட ஆட்சியர் வி.சுந்தரம், 1923-ஆம் ஆண்டிலேயே அன்னியர் ஆட்சி காலத்தில் வாகைகுளத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்றும், அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்து வாகைகுளத்தில் விமான நிலையம் அமைப்பதுதான் சரி என்றும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தி பேசினார்.
இறுதியாக பேசிய அமைச்சர் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் புருஷோத்தம கவுஷிக் வாகைகுளத்தில் விமானம் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தார் அவரது அறிவிப்பை வரவேற்று கூட்டத்தினர் கரவொலி எழுப்பினார்கள்., அதை தொடர்ந்து விமான நிலையத்திற்கான அடிக்கல் வாகைகுளத்தில் நாட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டு, பயணிகள் விமான போக்குவரத்து தொடங்கி, படிப்படியாக விரிவு படுத்தப்பட்டு, தற்போது பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு, அதனை பிரதமர் மோடி நாளை (சனிக்கிழமை) திறந்து வைக்க இருப்பது சந்தோசமாக இருக்கிறது.
இது பெரும் பாராட்டுக்குரியது மேலும் விமான நிலையம் வாகைகுளத்தில் அமைய குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன். மேற்கண்ட தகவலை, மதச்சார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவரும், தூத்துக்குடி மூத்த வழக்கறிஞரான எம் சொக்கலிங்கம் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)

திமுக அரசின் ஊழல் ஆட்சியைத் தமிழக மக்கள் விரும்பவில்லை - பிரதமர் மோடி
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:32:11 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் 8437 பேர் தபால் வாக்குகள் பதிவு - ஆட்சியர் தகவல்
வியாழன் 16, ஏப்ரல் 2026 12:31:37 PM (IST)


RajsJul 27, 2025 - 05:32:17 PM | Posted IP 162.1*****