» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
குமாரபுரத்தில் காவல்துறை சார்பில் புதிய சோதனை சாவடி : எஸ்பி ஸ்டாலின் திறந்து வைத்தார்!
திங்கள் 9, ஜூன் 2025 5:37:39 PM (IST)

குமாரபுரத்தில் புதிதாக கட்டப்பட்ட சோதனை சாவடியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமாரபுரம் பகுதியில் காவல்துறை சார்பில் தற்காலிக சோதனை சாவடி நிறுவப்பட்டிருந்தது. அச்சோதனை சாவடியை தரம் உயர்த்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் தரம் உயர்த்தப்பட்ட காவல் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. அதில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அதனை உள்ளிருந்து கண்காணிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதிதாக கட்டப்பட்ட காவல் சோதனை சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது நாகர்கோவில் உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் லலித்குமார், ஆரல்வாய்மொழி காவல் நிலைய ஆய்வாளர் பச்சமால் உட்பட பலர் கலநது கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

விபத்தில்லா குமரி: லாரி ஓட்டுநர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
சனி 6, டிசம்பர் 2025 4:59:02 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

குமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல் - 2பேர் கைது!
வெள்ளி 5, டிசம்பர் 2025 4:25:06 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்!
வெள்ளி 5, டிசம்பர் 2025 12:24:13 PM (IST)


.gif)