» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 9, ஜூன் 2025 3:38:43 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (09.06.2025) நடைபெற்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 420 கோரிக்கை மனுக்கள் இன்று பெறப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், கிள்ளியூர் வட்டத்தைச் சார்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மகன் ஆர்.எஸ்.அபிஜித் என்பவர் மின்சாரம் தாக்கி கடந்த 31.01.2025 அன்று உயிரிழந்ததற்கு அன்னாரது தந்தை ரமேஷ்குமார் அவர்களிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினையும், விளவங்கோடு வட்டம், குழித்துறை சப்பாத்து பாலத்தில் இரண்டு மாணவர்களின் உயிரை காப்பற்றி உயிர் தியாகம் செய்தி பீட்டர் ஜாண்சன் என்பவரது வாரிசு சான்றிதழ் அன்னாரது மகனிடம் வழங்கினார்.
தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவித்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்திட ஆணையிட்டதை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளையும், மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 13 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு தலா ரூ.1.14 இலட்சம் என மொத்தம் ரூ.14.82 இலட்சம் மதிப்பில் மோட்டார் பொருத்தப்பட்ட நவீன சக்கர நாற்காலிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) குருசந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர் துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் திடீர் ஆய்வு : மாணவ, மாணவியருக்கு அறிவுரை!!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:10:16 PM (IST)

ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கு நேரடி நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, ஜூன் 2025 12:04:22 PM (IST)

கொசு மருந்து தெளிப்போம்; மலேரியாவை ஒழிப்போம் : சுகாதாரத்துறை வேண்டுகோள்
திங்கள் 23, ஜூன் 2025 5:15:09 PM (IST)

ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் தகவல்
திங்கள் 23, ஜூன் 2025 12:09:22 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 2½ பவுன் செயின் பறிப்பு : மர்ம நபர் கைவரிசை!
திங்கள் 23, ஜூன் 2025 11:25:36 AM (IST)

ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள குமரி மீனவர்களை மீட்க வேண்டும்: மத்திய அரசுக்கு விஜய் வசந்த் கடிதம்!
ஞாயிறு 22, ஜூன் 2025 12:10:56 PM (IST)
