» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தேரூர் - புதுகிராமம் புதிய பாலம் பணிகள்: அரசு செயலாளர் செல்வராஜ் ஆய்வு!
வெள்ளி 22, நவம்பர் 2024 10:05:18 AM (IST)
தேரூர் மற்றும் புதுகிராமம் குளங்களை இணைக்கும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தினை நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட தேரூர் மற்றும் புதுகிராமம் குளங்களை இணைத்து கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தினை நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் டாக்டர்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேரூர் பேரூராட்சிக்குட்பட்ட தேரூர் மற்றும் புதுகிராம் குளங்களை இணைக்கும் பாலம் மிகவும் பழமையானதும், மிகவும் வலுவிழந்து பழுதடைந்திருந்ததால், அப்பாலத்தினை நாகர்கோவில் நெடுஞ்சாலை நபார்டு ஊரக சாலை உட்கோட்டம் - நபார்டு வங்கி நிதி உதவி (2022-2023) திட்டத்தின் கீழ் ரூ.71.70 இலட்சம் மதிப்பில் தேரூர் குளத்தையும், புதுகிராமம் குளத்தையும் இணைக்கும் வகையில் சாலையின் குறுக்கே 8.6 மீட்டம் நீளம் மற்றும் 7.5 மீட்டர் அகலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நடைபெற்ற ஆய்வில் கண்காணிப்பு செயற்பொறியாளர் சராதா, நெடுஞ்சாலைத்துறை கோட்ட செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி (கன்னியாகுமரி), சண்முகநாதன் (திருநெல்வேலி), நெடுஞ்சாலை நபார்டு உதவி கோட்ட பொறியாளர் ஞானகீதா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள் அரவிந்த் (நாகர்கோவில்), துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.