» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி மறியல் போராட்டம்!

சனி 16, நவம்பர் 2024 12:12:59 PM (IST)



கடமலைக்குன்று பகுதியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

குமரி மாவட்டம், கண்ணணூர் ஊராட்சி காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு, குமரி மேற்கு மாவட்டத் தலைவர் பினுலால் சிங், விலவூர் பேரூராட்சித் தலைவர் ஜே.சி. பில்கான், பத்மநாபபுரம் நகரத் தலைவர் ஹனு குமார் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் தக்கலை துணை காவல் கண்காணிப்பாளர் கா. பார்த்தீபன், ஆய்வளாளர் கிறிஸ்டி மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆய்வாளர் ரகுகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை உடனடியாக சீரமைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து இரவு வரை நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory