» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
செவ்வாய் 8, அக்டோபர் 2024 4:43:02 PM (IST)
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் "கட்சியின் கோட்பாடுகள், சட்டத் திட்டங்களுக்கு முரணாக செயல்பட்டதால் தளவாய் சுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், டெல்லியின் தமிழக பிரதிநிதியாக பொறுப்பு வகித்தவர் தளவாய் சுந்தரம். தொடர்ந்து 20 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வாங்கிக் கொடுக்க முக்கிய காரணியாக இருந்தவரும் தளவாய் சுந்தரமே. ஆர்எஸ்எஸ், பாஜகவுடன் தளவாய் சுந்தரம் நெருக்கம் காட்டி வருவதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமியின் இந்த அதிரடி உத்தரவு அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓகே ரைட்..!
அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தளவாய் சுந்தரம் எம்எல்ஏ விளக்கம்: என் மீது நடவடிக்கை எடுத்ததால் கவலை இல்லை. தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தேன். நீக்கப்பட்டு விட்டதால் ஓகே ரைட் என செல்ல வேண்டியதுதான். ஆர்எஸ்எஸ் பேரனியை தொடங்கி வைத்ததால் அதிமுகவின் பலம் குறையும் என இபிஎஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
8610015883 முத்துராஜாOct 8, 2024 - 09:28:24 PM | Posted IP 172.7*****