» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் தன்னார்வலர்கள்!
திங்கள் 10, ஜூன் 2024 7:48:54 AM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு காற்றில் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக சுமார் 20ஆயிரம் மரக்கன்றுகளை தன்னார்வலர்கள் நட்டு வருகின்றனர்.
தொழில் நகரமாம் தூத்துக்குடி மாநகரம். இங்கு நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிக அளவு கார்பன்-டை-ஆக்சைடு வெளியேறி பொதுமக்கள் பல்வேறு விதமான சுவாச நோய்களுக்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மண்ணில் மரம் வளர்ப்போம், மனதில் மரம் விதைப்போம் என்ற வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு அமைப்பை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் என்பவர் தலைமையில் உருவாக்கி தற்போது சுமார் 200 பேர் வரை இந்த தன்னார்வ அமைப்பில் உறுப்பினராக உள்ளனர்.
இந்த அமைப்பு சார்பில் தூத்துக்குடி மாநகரம் முழுவதும் கடந்த ஆறு ஆண்டுகளாக சுமார் 20,000 மரக்கன்றுகளை நட்டு பாதுகாத்து வருகின்றனர். இன்றைய தினம் தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியில் தங்களது தன்னார்வ அமைப்பு சார்பில் 317 வது வாரமாக சுமார் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டனர். இந்தப் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவங்கி வைத்தார்.
மாநகர் முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வரும் தன்னார்வலர் கூறும்போது தூத்துக்குடி தொழிற்சாலைகள் மிகுந்த நகரம் இதன் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் தாங்கள் அதிக அளவு ஆக்சிஜனை வெளியேற்றும் புங்கை மற்றும் வேம்பு மரங்களை நட்டு வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை வெள்ளம் காரணமாக பல்வேறு பகுதிகளில் நடப்பட்ட வேம்பு மரங்கள் அழுகிய நிலையில் தண்ணீரில் புங்கை மரங்கள் நன்றாக வருவதால் தாங்கள் தற்போது அதிக அளவு ஆக்ஸிஜனை மற்றும் நிழலை தரக்கூடிய இந்த புங்கை மரங்களை நட்டு வருவதாக தெரிவித்தனர்.
மேலும் தாங்கள் ஒவ்வொரு பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒரு பகுதியை தேர்ந்தெடுத்து குழி தோண்டி மரங்களை நட்டு பாதுகாத்து வருவதாகவும் மரம் நடுவதன் அவசியம் குறித்தும் மரங்களை பாதுகாப்பு மரம் வளர்த்தால் இயற்கையான காற்று வெளிப்படுவது பற்றியும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த மரங்களை அவர்கள் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பல்வேறு பகுதிகளில் தாங்கள் நட்ட மரங்கள் தற்போது மரமாக வளர்ந்து பலன் தருவது அந்த பகுதி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பல்வேறு நச்சுத் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் மாசு ஏற்படுத்தும் வகையில் வெளியேறும் காற்று சுத்திகரித்து பொதுமக்கள் நல்ல காற்றே சுவாசிக்க அனைவரும் மரக்கன்றுகளை நடுவது மட்டுமல்லாமல் அந்த மரக்கன்றுகளை பாதுகாத்து அவசியம்.
இயற்கை முன்னாள் ஆர்வலர்Jun 10, 2024 - 02:25:52 PM | Posted IP 162.1*****