» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

பத்மநாதபுரம் அரண்மனை திடீர் மூடல்: பொதுமக்கள் முற்றுகை போராட்டம்!

வெள்ளி 17, மே 2024 8:35:54 PM (IST)

பத்மநாதபுரம் அரண்மனை அரண்மனை திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பத்மநாதபுரத்தில் உள்ள அரண்மனை மிகவும் பிராதானமானதாகும். இந்நிலையில் அரண்மனை திடீரென மூடப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த  ஊர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரண்மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விசாரித்ததில் அரண்மனை ஊழியர் மரணம் அடைந்ததால் அரண்மனை மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு நாட்களுக்கு முன் பெண் ஊழியர் ஒருவர் இறந்த போது ஏன் அரண்மனை மூடப்படவில்லை என்று கோஷம் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவு கொண்டு வந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory