» செய்திகள் - விளையாட்டு » உலகம்

காசாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் : 22 பேர் பலி

சனி 10, ஆகஸ்ட் 2024 11:23:54 AM (IST)



காசாவில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர்.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை தளமாக கொண்டு ஹமாஸ் அமைப்பினர் செயல்படுகின்றனர். இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் சுமார் 250 பேர் பணய கைதிகளாககடத்திச் செல்லப்பட்டனர். இதனையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த போரில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். இதனால் போரை நிறுத்தும்படி உலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும்வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி கடந்த மாதம் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கினால் அதனை எதிர்க்கும் வகையில் ஈராக், சிரியா, துருக்கி ஆகிய நாடுகளின் ஆதரவையும் ஈரான் கோரி உள்ளது.

இதனையடுத்து இஸ்ரேல் போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒருபகுதியாக காசாவில் உள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 77 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதன்மூலம் இந்த போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 699 ஆக உயர்ந்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory