» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு மியான்மர் முழு ஆதரவு: மோடியிடம் மின் ஆங் லயங் உறுதி!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:16:16 AM (IST)

மியான்மர் மண்ணில் இந்திய பாதுகாப்புக்கு எதிரான செயல்பாடுகள் அனுமதிக்கப்பட மாட்டாது" என அந்நாட்டின் அதிபர் மின் ஆங் லயங் உறுதி அளித்துள்ளார்.
5 நாள்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் மின் ஆங் லயங், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். மியான்மரில் தேர்தல் முடிந்து அதிபராகப் பதவியேற்ற 2 மாதங்களில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இச்சந்திப்பு குறித்து வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்களிடம் கூறுகையில், "வர்த்தகம், பொருளாதாரம், எல்லை மேலாண்மை, சுகாதாரம், எரிசக்தி மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க இரு நாட்டுத் தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, மியான்மர் மண்ணில் இந்திய பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம் என்று அந்நாட்டு அதிபர் மீண்டும் உறுதி அளித்துள்ளார். மியான்மரின் இறையாண்மைக்கும், அங்கு அமைதி திரும்புவதற்கும் இந்தியாவின் ஆதரவு எப்போதும் உண்டு எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்" என்றார்.
மேலும், மியான்மர் முன்னாள் பிரதமர் ஆங் சான் சூகி குறித்தும், அங்கு அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலும் மியான்மர் அதிபரைத் தனியாகச் சந்தித்துப் பேசினார். தில்லியில் நடைபெறவிருந்த சர்வதேச சிறுத்தை, புலிகள் பாதுகாப்பு மாநாடு எபோலா காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும், இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளன. தில்லிப் பயணத்தைத் தொடர்ந்து, மியான்மர் அதிபர் இன்று (செவ்வாய்க்கிழமை) மும்பை சென்று அங்குள்ள முன்னணித் தொழிலதிபர்களைச் சந்திக்கவுள்ளார்.
இந்தியாவுடன் 1,640 கி.மீ. எல்லையைப் பகிர்ந்துள்ள மியான்மர், வடகிழக்கு மாநிலங்களின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த அண்டை நாடாகத் திகழ்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஞ்சாப்பில் அஸ்தியை கரைக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: லாரி மீது வேன் மோதி 9 பேர் சாவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:38:37 AM (IST)

சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:20:58 AM (IST)

நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்: மகன் கெஞ்சியும் கேட்காமல் கொடூரம்!
சனி 6, ஜூன் 2026 12:07:22 PM (IST)

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 7 பேர் பலி; 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
சனி 6, ஜூன் 2026 11:54:23 AM (IST)

தனியார் நிறுவனத்தில் இளம்பெண் கொடூர கொலை: காதலை முறித்ததால் சக ஊழியர் வெறிச்செயல்!
சனி 6, ஜூன் 2026 11:04:35 AM (IST)

கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக நீடிப்பு - ஆர்பிஐ அறிவிப்பு
வெள்ளி 5, ஜூன் 2026 4:14:52 PM (IST)


