» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
உச்ச நீதிமன்றத்திற்கு வி. மோகனா உள்பட 5 புதிய நீதிபதிகள் நியமனம் - மத்திய அரசு உத்தரவு!
திங்கள் 1, ஜூன் 2026 12:44:55 PM (IST)
உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் இன்று (ஜூன் 1) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் 124(2)-வது பிரிவின் கீழ், புதிய நீதிபதிகள் நியமனத்திற்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை ஏற்று நியமிக்கப்பட்டுள்ள புதிய நீதிபதிகள் பட்டியல்:
1. நீதிபதி ஷீல் நாகு – பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
2. நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் – மும்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
3. நீதிபதி சஞ்சீவ் சச்தேவா – மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
4. நீதிபதி அருண் பல்லி – ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி
5. வி. மோகனா – உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் (பார் கவுன்சிலில் இருந்து நேரடியாக நியமனம்)
நீதிபதிகள் எண்ணிக்கை 37 ஆக உயர்வு:
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையைத் தலைமை நீதிபதி உட்பட 33-லிருந்து 38 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை கடந்த மே 5-ஆம் தேதி ஒப்புதல் அளித்திருந்தது. தற்போதைய 5 நீதிபதிகள் நியமனம் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்கிறது. இதன் மூலம் இன்னும் ஒரே ஒரு நீதிபதி பணியிடம் மட்டுமே காலியாக இருக்கும்.
குறிப்பு (கோடை விடுமுறை & ஓய்வு): இன்று (ஜூன் 1) முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்குப் பகுதியளவு கோடை விடுமுறையாகும். இந்த விடுமுறை காலத்தின் போது, நீதிபதி பங்கஜ் மித்தல் (ஜூன் 16) மற்றும் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி (ஜூன் 28) ஆகிய இரு நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பஞ்சாப்பில் அஸ்தியை கரைக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்: லாரி மீது வேன் மோதி 9 பேர் சாவு!
ஞாயிறு 7, ஜூன் 2026 11:38:37 AM (IST)

சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஞாயிறு 7, ஜூன் 2026 9:20:58 AM (IST)

நடத்தை சந்தேகத்தில் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்: மகன் கெஞ்சியும் கேட்காமல் கொடூரம்!
சனி 6, ஜூன் 2026 12:07:22 PM (IST)

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 7 பேர் பலி; 3 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்!
சனி 6, ஜூன் 2026 11:54:23 AM (IST)

தனியார் நிறுவனத்தில் இளம்பெண் கொடூர கொலை: காதலை முறித்ததால் சக ஊழியர் வெறிச்செயல்!
சனி 6, ஜூன் 2026 11:04:35 AM (IST)

கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை: ரெப்போ வட்டி விகிதம் 5.25% ஆக நீடிப்பு - ஆர்பிஐ அறிவிப்பு
வெள்ளி 5, ஜூன் 2026 4:14:52 PM (IST)


