» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வயநாடு தொகுதி இடைத் தேர்தல்: இமாலய வெற்றியை நோக்கி பிரியங்கா!

சனி 23, நவம்பர் 2024 11:11:35 AM (IST)

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இமாலய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

2024 மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வேட்பாளராக களமிறங்கிய ராகுல் காந்தி, உத்தர பிரதேச மாநிலம் ரே பரேலியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளிலும் வென்ற ராகுல் காந்தி, ரே பரேலி மக்களவைத் தொகுதியை தக்கவைத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். 

அவர் வயநாடு மக்களவைத் தொகுதியின் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து நவ.13ஆம் தேதி வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்து இன்று காலை வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியிருக்கிறது.

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்று காலை 9.45 மணி நிலவரப்படி, பிரியங்கா காந்தி 68,000 வாக்குகள் பெற்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். பாஜக வேட்பாளர் 11 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளிலேயே தேசிய அளவில் கவனக்குவிப்பு பெற்ற தொகுதியாக மாறியது கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல். நாடு முழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. 14 மாநிலங்களில் இருக்கும் 48 பேரவைத் தொகுதிகளுக்கும், வயநாடு மற்றும் மகாராஷ்டித்தில் ஒரு தொகுதி என இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory