» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ப.சிதம்பரம் மீது நடவடிக்கை: கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை!

வெள்ளி 22, நவம்பர் 2024 11:40:07 AM (IST)

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு க மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு மே மாதம் பற்றிய வன்முறை தற்போதும் நீடித்து வருகிறது. மணிப்பூரில் உள்ள மைத்தேயி இனத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை பரிசீலிக்கும்படி கூறிய அம்மாநில ஐகோர்ட்டு அனுமதி அளித்தற்கு பழங்குடிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

அனைத்து பழங்குடியின மாணவர்கள் சங்கம் அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்தப் பேரணியில் ஏற்பட்ட மோதல், மாநிலம் முழுவதும் பரவி வன்முறையாக உருவெடுத்து, இன்று வரை தொடர்கிறது. மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் அண்மையில் மணிப்பூர் கல்வரம் தொடர்பாக பதிவிட்டு இருந்தார். ப.சிதம்பரம் வெளியிட்ட பதிவில், பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அப்பதிவை நீக்கிவிட்டார்.

இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், "மணிப்பூர் விவகாரம் தொடர்பான ப.சிதம்பரம் பதிவின் உள்ளடக்கத்தை நாங்கள் ஒருமனதாக கண்டிக்கிறோம்" என்று கூறியுள்ளனர். மேலும், சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளனர். 


மக்கள் கருத்து

UNMAINov 22, 2024 - 03:44:08 PM | Posted IP 162.1*****

நல்ல செய்தி, காங்கிரஸில் பல பல கோஷ்டிகள் , இவர் மத்திய மந்திரியாக இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல விஷயமும் செய்யவில்லை, இவர் தனது குடுபவளர்ச்சியை முன்னேற்றி விட்டார்.

கந்தசாமிNov 22, 2024 - 01:58:55 PM | Posted IP 172.7*****

இவனை கட்சியை விட்டு நீக்குங்கள் இவனா யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory