» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவை வளர்த்து வருகிறது : உதயநிதி ஸ்டாலின்

சனி 2, நவம்பர் 2024 4:03:14 PM (IST)



திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மலையாள மனோரமா நடத்தும் இலக்கிய விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  "திராவிட இயக்கங்கள்தான் பகுத்தறிவையும், அறிவியல் பூர்வ வளர்ச்சியையும் வளர்த்து வருகிறது. இந்தி திணிப்புக்கு எதிராக திராவிட இயக்கம் நடத்திய போராட்டம் மிக முக்கியமானது. 

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் தெரிந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை இருந்தது, அதனை மாற்றியது நீதிக்கட்சிதான். மாநில மொழிகளை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பது திராவிட இயக்கம்தான். சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இந்தி எனும் மொழியை தி.மு.க எதிர்க்கவில்லை, இந்தி மொழி திணிப்பையே எதிர்க்கிறோம். 

மொழிப்போர் தியாகிகளை போற்றும் வகையில் தி.மு.க அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. நீட் தேர்வு என்பது மாநில சுயாட்சிக்கு எதிராக உள்ளது.  ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற பாஜகவின் அடாவடி திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த பெரியார் கேரளாவில் வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்று கூறினார்.  


மக்கள் கருத்து

மாநில சுயாட்சிNov 3, 2024 - 12:43:51 PM | Posted IP 162.1*****

பகுத்தறிவு பற்றி விபரம் தெரியுமா? கிட்டத்தட்ட 1967 முதல் உங்கள் கட்சி சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள், அனால் அர்த்தம் தெரியவில்லை, மக்களுக்கு தெரியாத வரை உங்களுக்கு லாபம்தான்.....

என்னது ?Nov 2, 2024 - 06:18:33 PM | Posted IP 172.7*****

பூசாரியை வீட்டுக்குள்ளே கூட்டிட்டு வந்து பூஜை செய்யற மாதிரியா? அது புழுத்தறிவு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory