Mr.லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பார்க்காத பாடல்

Sponsored Ads


Mr.லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பார்க்காத பாடல்
பதிவு செய்த நாள் ஞாயிறு 7, ஏப்ரல் 2019
நேரம் 11:10:15 PM (IST)

மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல்பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சீமராஜா படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ள நிலையில் மே 1-ம் தேதி படம் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ‘டக்குனு டக்குனு பார்க்காத’என்ற பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடலை ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில் அனிருத் பாடியுள்ளார்.



Thoothukudi Business Directory