» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
தொகுப்பூதிய கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
திங்கள் 5, டிசம்பர் 2022 4:04:11 PM (IST)
ஊராட்சி ஒன்றியங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்...

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிய, 2007 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் கணினி உதவியாளர்கள் தமிழ்நாடு அரசால் பணியமர்த்தப்பட்டனர். பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதிமொழியுடன் பணியில் சேர்க்கப்பட்ட அவர்கள் அனைவரும், 15 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னும் இன்றுவரை தமிழ்நாடு அரசு பணி நிரந்தரம் செய்ய மறுத்து வருவது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் பணி நிரந்தரம் வேண்டி கணினி உதவியாளர்கள் முன்னெடுத்த பல்வேறு கட்டப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 22.03.2017 அன்று பணி நிரந்தரம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டபோதும், இறுதிவரை பணி நிரந்தரம் செய்யாமல் அதிமுக அரசு வஞ்சித்தது. அதன்பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசும், முந்தைய அதிமுக அரசினைப் போலவே பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருவது கணினி உதவியாளர்களுக்கு செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
பணி நிரந்தர அரசாணை வெளியிட்டு ஆறு ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து கணினி உதவியாளர்கள் வீதியில் இறங்கி பல்வேறு தொடர்ப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் அரசாணை 37 இன் படி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊராட்சி முகமையில் பணிபுரியும் 906 கணினி உதவியாளர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும், ஊதிய உயர்வு, வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அத்தனை அடிப்படை உரிமைகளையும் வழங்கிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக கணினி உதவியாளர்கள் கடந்த 1ஆம் தேதி முதல் முன்னெடுக்கும் தொடர்விடுப்பு அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழுமையான ஆதரவினைத் தெரிவிப்பதோடு, கோரிக்கைகள் வெல்லும்வரை தோள்கொடுத்து துணைநிற்போம் என்றும் உறுதியளிக்கின்றேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து வர விடமாட்டேன்: சசிகலா
செவ்வாய் 24, ஜனவரி 2023 4:29:46 PM (IST)

அரசியலில் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்; இடைத் தேர்தலில் வெல்வதே இலக்கு: சீமான்
ஞாயிறு 22, ஜனவரி 2023 8:24:38 PM (IST)

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா 3 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு!
புதன் 18, ஜனவரி 2023 3:27:58 PM (IST)

ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்தியாவில் வறுமை அதிகரிக்கும்- டாக்டர் ராமதாஸ்
செவ்வாய் 17, ஜனவரி 2023 12:38:08 PM (IST)

ஆளுநர் விலக வேண்டும், இல்லையேல் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் : வைகோ அறிக்கை!
திங்கள் 9, ஜனவரி 2023 3:43:49 PM (IST)

மது விற்பனையை நம்பி ஆட்சி செய்வது தான் திராவிட மாடலா?- அன்புமணி கேள்வி!!
வியாழன் 5, ஜனவரி 2023 11:55:44 AM (IST)

SUN SUNDec 13, 2022 - 04:15:24 PM | Posted IP 162.1*****