» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
கருத்து சுதந்திரத்தை பறிக்கும் திமுக அரசு: கிஷோர் கே.சாமி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்
திங்கள் 21, நவம்பர் 2022 8:25:00 PM (IST)
பாஜக ஆதரவாளர் கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
மழை பாதிப்பு இடங்களில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்ட ஆய்வு தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த கிஷோர் கே. சாமி, அவதூறு கருத்து பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரைதேடி வந்தனர். இதனிடையே அவர் புதுச்சேரியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த போலீசார், 4-வது வழக்கில் கிஷோர் கே.சாமியை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தற்போது அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் கிஷோர் கே.சாமி கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கிஷோர் கே.சாமி கைதை தமிழ்நாடு பாஜக வன்மையாக கண்டிக்கிறது. தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி அவர்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் இந்த அரசு, தமிழக பாஜக பெண் தலைவர்களை இழிவாக பேசிய திமுக பேச்சாளரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? கிஷோர் கே.சாமி தந்தையாரிடம் உரையாடி, தேவையான சட்ட உதவிகளை தமிழ்நாடு பாஜக செய்யும் என்ற உத்தரவாதத்தை அளித்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொளத்தூரில் ஸ்டாலின், காரைக்குடியில் சீமான்: முதல் நாளிலேயே 560 மனுக்கள் தாக்கல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:21:58 AM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு மீண்டும் போட்டி: அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!
புதன் 25, மார்ச் 2026 3:35:47 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி: தென்னகத்தின் நுழைவாயில் - மக்களின் தீராத எதிர்பார்ப்புகள்!
செவ்வாய் 24, மார்ச் 2026 8:53:53 PM (IST)

அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

ஜனநாயகன் ரிலீஸ் தேதியை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தணிக்கை வாரியம் அறிவிப்பு!
புதன் 18, மார்ச் 2026 5:17:30 PM (IST)

பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்ல அனுமதியில்லை: கட்டுப்பாடுகள் முழு விபரம்!
திங்கள் 16, மார்ச் 2026 4:13:23 PM (IST)

