» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்
தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் - சீமான் எச்சரிக்கை!
வெள்ளி 18, நவம்பர் 2022 4:30:48 PM (IST)
தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான முடிவைத் தெலுங்குத் தயாரிப்பாளர் சங்கம் திரும்பப்பெறாவிட்டால், தமிழகத்தில் தெலுங்குத் திரைப்படங்களை வெளியிட விடமாட்டோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்களைச் சேர்ந்த திரைத்துறையினருக்கும் புகலிடமாகவும், மூலமாகவும் விளங்கிய தமிழ்த்திரையுலகை வஞ்சிக்கும் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால், தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகராகத் திகழும் அன்புத்தம்பி விஜய் அவர்களது வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டுக்கானத் திரையரங்க ஒதுக்கீட்டில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
நேரடித் தெலுங்குத் திரைப்படங்களோ, மொழிமாற்றம் செய்யப்பட்ட தெலுங்குத் திரைப்படங்களோ எதுவாகினும் தமிழகத்தில் எவ்விதப் பாரபட்சப்போக்குக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தப்படாது, தமிழ்த் திரைப் படங்களுக்கு இணையாகத் திரையரங்குகளைப் பெற்று வரும் நிலையில், ஆந்திர மாநிலத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்நடவடிக்கை தேவையற்ற ஒன்றாகும்.
பாகுபலி, ஆர்.ஆர்.ஆர்., புஷ்பா, காந்தாரா, கே.ஜி.எப். எனப் பிறமொழி படங்களுக்கு தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படும் போது, அப்படங்களுக்கு இருந்த மக்கள் ஆதரவுதான் அளவுகோலாக வைக்கப்பட்டதே ஒழிய, மொழிப்பாகுபாடு ஒருபோதும் காட்டப்பட்டதில்லை.
'கலைக்கு மொழி இல்லை' என்றுகூறி, தமிழ்த்திரையுலகிலும், திரையரங்க ஒதுக்கீட்டிலும் மற்ற மொழியினருக்கும், அவர்களது திரைப்படங்களுக்கும் பெருவாய்ப்பு வழங்கி, 'தென்னிந்திய நடிகர் சங்கம்' எனப் பெயரைத் தாங்கி நிற்கும் தமிழ்த்திரையுலக்கு இந்நிகழ்வு ஒரு பாடமாகும்.
Also Read - முதல்-அமைச்சரை விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி..!
திரைப்படைப்புகளுக்கும், படப்பிடிப்புகளுக்கும் மற்ற மொழியினரையும், மற்ற மாநில திரைத்துறையையும் பயன்படுத்தி கொண்டு, திரையரங்க ஒதுக்கீட்டில் காட்டப்படும் சமத்துவமற்ற இத்தகைய அணுகுமுறை நலம் பயக்கக் கூடியதல்ல!
தென்னிந்திய நடிகர்களுள் முதன்மையானவராகத் திகழும் தம்பி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்திற்கே இந்நிலையென்றால், மற்ற படங்களின் நிலை என்னவாகும்? எனும் கேள்விதான் எழுகிறது. இச்சிக்கல், விஜய் எனும் ஒரு நடிகரின் திரைப்பட வெளியீட்டுக்கு எழுந்திருக்கும் சிக்கலல்ல; தமிழ்த் திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிராகவே ஆந்திராவில் தொடுக்கப்பட்டிருக்கும் மறைமுக நெருக்கடியாகும். இதனை ஒருபோதும் ஏற்கவோ, அனுமதிக்கவோ முடியாது.
ஆகவே, தமிழ்த்திரைப்படங்களின் வெளியீட்டுக்கெதிரான தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், தெலுங்குத் திரைப்படங்களைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோமென வன்மையாக எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
ORIGINAL COMEDIANNov 19, 2022 - 06:37:57 AM | Posted IP 162.1*****
IS DMK LEADER
காமெடிNov 18, 2022 - 05:50:35 PM | Posted IP 162.1*****
அண்ணன்
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக பற்றி அ.தி.மு.க.வினர் விமர்சிக்க கூடாது: எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
புதன் 20, செப்டம்பர் 2023 5:29:51 PM (IST)

ஆவின் நெய் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி கோரிக்கை
வியாழன் 14, செப்டம்பர் 2023 5:12:37 PM (IST)

மக்களவை தேர்தலுக்குள் அதிமுக ஒருங்கிணைப்பு - வி.கே.சசிகலா நம்பிக்கை
திங்கள் 11, செப்டம்பர் 2023 10:41:55 AM (IST)

நாட்டின் பெயர் மாற்றுவதால் என்ன ஆகப் போகிறது? சீமான் கேள்வி
புதன் 6, செப்டம்பர் 2023 3:59:14 PM (IST)

டிசம்பர் மாதத்திலேயே மக்களவைத் தேர்தல் வரலாம்: மம்தா பானர்ஜி கணிப்பு
செவ்வாய் 29, ஆகஸ்ட் 2023 10:43:34 AM (IST)

தமிழ்நாட்டை நிரந்தரமாக திமுக ஆள வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
வியாழன் 17, ஆகஸ்ட் 2023 5:49:00 PM (IST)

SOORIYANNov 19, 2022 - 03:43:23 PM | Posted IP 162.1*****