» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு செய்திகள்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை!

செவ்வாய் 1, நவம்பர் 2022 11:16:42 AM (IST)

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று விடுதலைத் திருநாள் விழாவில்  முதல்வர் ரங்கசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவுக்கு 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்தது. ஆனால் 300 ஆண்டுகள் பிரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரியானது இந்தியா விடுதலை பெற்ற 7 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 1954ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி விடுவிக்கப்பட்டு, இந்திய அரசுடன் இணைந்தது. இதனால் புதுச்சேரி விடுதலை நாள் விழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையொட்டி புதுச்சேரி கடற்கடையில் நடைபெறக்கூடிய வண்ணமயமான விழாவில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறை, தேசிய மாணவர் படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், கிராமிய நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர் ராஜவேலு, உள்துறை அமைச்சர் நமசிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர்கள், காவல்துறை உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் முதல்வர் ரங்கசாமி விடுதலை நாள் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,   "புதுச்சேரியில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  1,056 பணியிடங்களை முதற்கட்டமாக நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கான அறிவிப்பு அந்தந்தத் துறை சார்பில் நாளை நவம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்படும்.  மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் வரும் காலங்களில் தொடரும். 

புதுச்சேரி மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 2020-21ஆம் ஆண்டில் சுமார் ரூ.35 ஆயிரம் கோடியாக இருந்தது. இது , 2021-22ஆம் ஆண்டில் சுமார் ரூ. 37 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.39 ஆயிரம் கோடியாக உயரும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டுகளாக தனிநபர் வருமானமும் உயர்ந்துள்ளது . மக்களின் நலன் கருதி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory